உள்ளூர் செய்திகள்

புதிய பாரத எழுத்தறிவு திட்டம்

இளையான்குடி: இளையான்குடி ஒன்றியத்தில் பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்கம் மூலம் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் 33 மையங்களில் பலர் கல்வி பயின்று வந்தனர்.கடந்த 6 மாத காலத்தில் முற்றிலும் எழுதப்படிக்க தெரியாத 15 வயதிற்கு மேற்பட்டவர்கள் அடிப்படை எண்ணும் எழுத்தும்திறனை அறிவதற்காக தன்னார்வலர்கள் மூலம் வகுப்புகள் நடைபெற்று அவர்களுக்கான தேர்வு நடைபெற்றதில்665 பேர் தேர்வு எழுதினர்.தேர்வு மையத்தை வட்டாரக் கல்வி அலுவலர்கள் சார்லஸ், டேவிட் ரொசாரியோ, ஜஸ்டின், மேற்பார்வையாளர் பிரான்சிஸ் மற்றும் ஒருங்கிணைப்பாளர் மணி மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் பார்வையிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்