உள்ளூர் செய்திகள்

தொழில் முனைவோர் பட்டயபடிப்பு வாய்ப்பு

மதுரை: தமிழக அரசு, அகமதாபாத்தில் இயங்கி வரும் இ.டி.ஐ.ஐ., என்ற நிறுவனத்துடன் இணைந்து, ஓராண்டு தொழில் முனைவோர் பயிற்சிக்கான பட்டய படிப்பு வழங்க உள்ளது.சென்னை இ.டி.ஐ.ஐ., தலைமையகத்தில் ஆண்டுக்கு 500 பேருக்கு பயிற்சி வழங்கப்படும். இதற்கான கட்டணம் ரூ. ஒரு லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இந்த பட்டய படிப்புக்கான பாடத்திட்டம், மாணவர் சேர்க்கை விதிமுறைகள், மாணவர்கள் தேர்ச்சி குறித்து அந் நிறுவனமே முடிவு செய்யும். ஆங்கில மொழியில் பயிற்சி இருக்கும் என்பதால், ஆங்கில புலமை இல்லாதோருக்கு சிறப்பு பயிற்சியும் வழங்கும்.21 முதல் 30 வயதுக்குட்பட்ட இளநிலை பட்டதாரிகள் சேரலாம். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு உள்ஒதுக்கீடு செய்யப்படும். நுாறு சதவீதம் கல்வி உதவித் தொகை பெற வழி உள்ளது. இதில் பொருளாதாரத்தில் பின்தங்கியோர் பங்கு பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்