கலெக்டருக்கு பரிசு வழங்கிய மாணவி
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பண்ணைக்காடு பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி பிரியதர்ஷினி, கலை பண்பாட்டு துறையில் ஓவிய போட்டியில் பங்கேற்று பரிசு பெற்றார். அவரை கலெக்டர் பூங்கொடி நேரில் அழைத்து பரிசு வழங்கினார்.இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கலெக்டர் பூங்கொடியின் உருவப்படத்தை தத்ரூபமாக வரைந்த மாணவி, அதனை கலெக்டருக்கு பரிசாக வழங்கினார்.