ஈரோடு சி.இ.ஓ., பொறுப்பேற்பு
ஈரோடு: ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றிய சம்பத்-, சென்னை தொடக்க கல்வி இயக்கக துணை இயக்குனராகவும், அங்கு பணிபுரிந்த சுப்பாராவ், ஈரோடு முதன்மை கல்வி அலுவலராகவும் இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில் ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக சுப்பாராவ் நேற்று முன்தினம் பொறுப்பேற்றுக்கொண்டார். அலுவலக அலுவலர்கள், கல்வி மாவட்ட அலுவலர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.