உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு உதவியவர்களுக்கு விருது

உடுமலை: மாற்றுத்திறனாளி நலனுக்காக சிறப்பாக சேவை செய்தவர்கள், மாநில அரசின் விருது பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.ஒவ்வொரு ஆண்டிலும், சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தில், அவர்களின் நலனுக்காக சேவை செய்தவர்கள அல்லது நிறுவனங்களுக்கு மாநில அரசின் சார்பில் விருது வழங்கப்படுகிறது.நடப்பாண்டில் அதற்கான விருது பெறுவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் தினமான டிச., 3ம் தேதி விருதுகள் வழங்கப்பட உள்ளன. அதற்கு தகுதியுள்ளவர்களுக்கான பட்டியல் குறித்தும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.அதில் பல்வேறு மாற்றுத்திறன் கொண்டவர்களுக்கு, சிறந்த பணியாளர் அல்லது சுயதொழில் புரிவோர் விருது பத்து நபர்களுக்கு வழங்கப்படுகிறது. ஹலன் கெல்லர் விருது இரண்டு நபர்களுக்கும், சிறந்த ஆசிரியர் விருது ஒருவருக்கும் வழங்கப்படுகிறது.விருதுக்கு விண்ணப்பிக்க https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை, இன்று (28ம் தேதி) மாலைக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். தகுதியுள்ள நபருக்கு மாற்றுத்திறனாளிகள் தினத்தில் விருது, தங்கப்பதக்கம், சான்றிதழ் வழங்கப்படுகிறது. இவ்வாறு, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்