உள்ளூர் செய்திகள்

ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் டேட்டா சென்டர்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்கும் இந்தியாவின் முதல் தரவு மையமாக 'ஏர்டெல் என்எக்ஸ்ட்ரா' மாறியுள்ளதாக, அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷிஷ் அரோரா தெரிவித்துள்ளார்.இந்தியாவின் மிகப்பெரிய அறிவாற்றல் மிக்க, நிலையான தரவு மையங்களை 120க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள முன்னணி நிறுவனங்கள், ஹைப்பர் ஸ்கேலர்கள், ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் மற்றும் அரசாங்களுக்கு ஏர்டெல்லின் என்எக்ஸ்ட்ரா வழங்குகிறது. சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, கொல்கத்தா, மும்பை, டெல்லி-என்.சி.ஆர்., நகரங்களில் 7 புதிய ஹைபர்ஸ்கேல் வளாகங்கள் அமைக்கப்படுவதால், இந்நிறுவனம் 2 ஆண்டுகளில் அதன் தற்போதைய திறனை இருமடங்காக உயர்த்தி, 400 மெகாவாட் என்ற நிலையை அடைய உள்ளது.இக்கோலிபிரியம் நிறுவனத்தின் ஏ.ஐ., உடன் இயங்கும் ஸ்மார்ட்சென்ஸ் தளத்தை ஒருங்கிணைப்பதன் வாயிலாக, பல்வேறு வகையில் நிறுவனங்களை மேம்படுத்துவதோடு, மூலதன செலவுகளை வெகுவாக குறைக்கிறது என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்