வடமாநில குழந்தைகளை ஊக்கப்படுத்த வேண்டும்
சென்னை: தமிழகத்தில் படிக்கும் வடமாநில குழந்தைகளுக்கும் சலுகைகள் அளித்து ஊக்கப்படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.பள்ளிக்கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழகத்தின் அரசு பள்ளிகளில் படிக்கும் வடமாநில குழந்தைகளுக்கு தமிழ் மொழியை பயிற்றுவிக்கும் முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். வடமாநிலத்தவர் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்க்க ஊக்குவிக்க வேண்டும். அவ்வாறு சேர்ந்து அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு உதவித்தொகை, பரிசுகள் மற்றும் இதர சலுகைகள் அளித்து உற்சாகப்படுத்த வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளார்.