டெல்டா மாவட்டம்: புதிய கல்லுாரிகள்
சென்னை: திருச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் புதிய கல்லூரிகள் திறக்கப்படும் பட்ஜெட்டில் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.*புதுக்கோட்டை மாநக ராட்சி, அறந்தாங்கி நகராட்சி மற்றும், 526 ஊரக குடியிருப்புகள் பயன் பெறும் வகையில், 1,820 கோடி ரூபாயில் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்*மயிலாடுதுறை, சீர்காழி நகராட்சிகள்; தரங்கம்பாடி, மணல்மேடு மற்றும் குத்தாலம் பேரூராட்சிகள் மற்றும் 1,042 ஊரக குடியிருப்புகள் பயன் பெறும் வகையில், 2,200 கோடி ரூபாயில் கூட்டுக்குடிநீர் திட்டம் அமல்படுத்தப்படும்*திருச்சி மாநகராட்சியில், 100 கோடி ரூபாய் நகர்ப்புற பத்திரங்கள் வாயிலாக, கூடுதல் நிதி ஆதாரங்கள் திரட்ட முயற்சிக்கப்படும்.*திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை; தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதுாரில் புதிதாக கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் திறக்கப்படும்.*கடலுாரில் காலணி தொழில் பூங்கா*திருச்சியில், 5,000 பேர் வேலைவாய்ப்பு பெறும் வகையில், 250 ஏக்கரில் பொறியியல் மற்றும் வார்ப்பக தொழில் பூங்கா*கடலுாரில் 500 ஏக்கரில், புதுக்கோட்டையில் 200 ஏக்கரில் புதிய தொழிற் பூங்கா.*ஒரு லட்சம் புத்தகங்களுடன், போட்டித் தேர்வு மாணவர்கள் படிக்கும் வசதியுடன் கடலுாரில் புதிய நுாலகம் கட்டப்படும்.