உள்ளூர் செய்திகள்

தேசிய போட்டியில் மாணவர்கள் சாதனை

அருப்புக்கோட்டை: ஜன., 15, அருப்புக்கோட்டை சவுடாம்பிகா ஓட்டல் மேனேஜ்மென்ட் கல்லுாரியில் படிக்கும் மாணவர்கள் சிவகாசியில் உள்ள, வஸ்திரா இன்ஸ்டியூட் ஆப் சயின்ஸ் அண்ட் மேனேஜ்மென்ட் கல்லுாரியில் நடந்த, புதிய விருந்தோம்பல் நட்சத்திரத்தை கண்டறிதல் என்ற தேசிய அளவில் நடந்த போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.இதில் 20க்கும் மேற்பட்ட கல்லுாரிகளை சேர்ந்த 500 மாணவர்கள் கலந்து கொண்டனர். சவுடாம்பிகா ஓட்டல் மேனேஜ்மென்ட் கல்லுாரி மாணவர்கள் 'செப் சிக்னேச்சர்', 'காக்டைல் மாக் டைல்', 'கார்விங்', 'டவல் போல்டிங்' உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டனர்.2ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் நிதீஷ்குமார், மணிகண்டன் ஆகியோர் முதல் பரிசை வென்றனர். பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு ஒட்டுமொத்த 3ம் இடத்தை பிடித்தனர். மாணவர்களுக்கு சான்றிதழ்கள் பதக்கங்கள் ரொக்கம் பரிசு ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்