உள்ளூர் செய்திகள்

வேலையற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெறலாம்

உடுமலை: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்து ஆண்டுகளாகியும் வேலை கிடைக்காத படித்த இளைஞர்களுக்கு, தமிழக அரசு, மாதந்தோறும் உதவித்தொகை வழங்கி வருகிறது.பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் 200 ரூபாய்; பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றோருக்கு 300 ரூபாய்; மாற்றுத்திறனாளிகளுக்கு 600 ரூபாய்; பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு 400 ரூபாய்; மாற்றுத்திறனாளிகளுக்கு 750 ரூபாய்; பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரிகளுக்கு 600 ரூபாய்; மாற்றுத்திறனாளிகளுக்கு 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு உட்பட்டவராகவும்; மற்ற பிரிவினர், 40 வயதுக்குள் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு இல்லை.உதவித்தொகை பெறும் காலங்களில், வேலைவாய்ப்பு அலுவலக பதிவை தொடர்ந்து புதுப்பித்து வருபவராக இருக்க வேண்டியது அவசியம்.வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பித்து, பொது மனுதாரர் 5 ஆண்டுகள்; மாற்றுத்திறனாளிகள், ஓராண்டு முடிவடைந்தும் வேலை கிடைக்காதோர் விண்ணப்பிக்கலாம்.https://employmentexchange.tn.gov.in என்கிற இணையதளம் மூலமாகவோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்