பண்ணாரியம்மன் கல்லுாரியில் தலைமைத்துவ கருத்தரங்கு
கோவை: ஈரோடு சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லுாரியில் மாணவர்களின் ஆளுமைத் திறன் மற்றும் தொழில்முறை அறிவை மேம்படுத்தும் நோக்கில், 'லீடர்ஷிப் கனெக்ட்' எனும் தலைமைத்துவ இணைப்பு நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரியின் தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார்.சிறப்பு விருந்தினர் இந்திய மின்னணு சங்கத்தின் தலைவர் வீரப்பன், செமிகண்டக்டர் மற்றும் சிப் வடிவமைப்புத் துறையில் மாணவர்கள் புதுமையான சிந்தனைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.வளாகத்திலுள்ள சிறப்பு ஆய்வகங்களைப் பார்வையிட்ட அவர், மாணவர்களின் ஆராய்ச்சித் திட்டங்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கினார். ஏராளமான மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பயனடைந்தனர்.