கல்லுாரிகளுக்கு பசுமை சாம்பியன் விருது
திண்டுக்கல்: நீர் சுகாதாரம், சூழல் பாதுகாப்பை முன்னெடுத்த நிறுவனங்களுக்கு பசுமை சாம்பியன் விருதுகளை கலெக்டர் சரவணன் வழங்கினார்.தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முன்முயற்சியுடன் பங்கேற்று சிறந்த பங்களிப்பு ஆற்றிய தனி நபர்கள், அமைப்புகளுக்கு ரூ.1 கோடி செலவில் பசுமை சாம்பியன் விருது வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.அதன்படி தலா ஒரு லட்சம் பரிசு தொகைகள், சான்றிதழ்களுடன் விருதுகள் வழங்கப்படுகின்றன. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் வழங்கப்படும் 2025க்கான பசுமை சாம்பியன் விருதுகள் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த வாஷ் நிறுவனம், ஜி.டி.என்., கலைக் கல்லுாரி , சக்தி மகளிர் கலை அறிவியல் கல்லுரிக்கு பசுமை சாம்பியன் விருது, சான்றிதழ், ஒரு லட்சம் பரிசுத் தொகையை கல்லுாரிகள், நிறுவன பிரதிநிதிகளிடம் கலெக்டர் சரவணன் வழங்கினார். பயிற்சி கலெக்டர் வினோதினி, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ரமேஷ் உடனிருந்தனர்.