உள்ளூர் செய்திகள்

மாணவருக்கு கல்விசார் பொருட்கள் இலவசம்

மதுரை: மதுரை ஸ்ரீபூ கல்சுரல் அகாடமி, இந்திய பொறியாளர் சங்கம் சார்பில், உலக மறுசுழற்சி தினம், சர்வதேச பூஜ்ய கழிவு தினத்தை முன்னிட்டு, ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட கல்வி சார்ந்த பொருட்கள் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன.மறு உபயோகத்தை ஊக்குவிக்கும் வகையில் பழைய, நல்ல நிலையில் உள்ள பொறியியல் பாட புத்தகங்கள், என்.சி.இ.ஆர்.டி., பிளஸ் 1, பிளஸ் 2 புத்தகங்கள், யு.பி.எஸ்.சி., (பொறியியல்), ஜே.இ.இ., கேட் உள்ளிட்ட போட்டித் தேர்வு புத்தகங்கள், டிராப்டர், செட் ஸ்கொயர், இன்ஜினியரிங் கால்குலேட்டர் உள்ளிட்டவை சேகரிக்கப்பட்டு பொறியியல், போட்டித் தேர்வு செல்லும் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன.பள்ளி, கல்லூரி என்.எஸ்.எஸ்., அமைப்புகள் தன்னார்வலராக பங்கேற்கலாம். பொருட்களை கொடுக்க, வாங்க விருப்பம் உள்ளவர்கள் சர்வேயர் காலனி,120 அடி ரோட்டில் உள்ள இந்திய பொறியாளர் சங்க மதுரை மையத்திற்கு மார்ச் 30 மதியம் 03:00 முதல் இரவு 07:00 மணிக்குள் வரலாம். நூல் வாங்க விரும்பும் மாணவர்கள் உரிய அடையாள அட்டையுடன் வர வேண்டும். தொடர்புக்கு: 77083 69606.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்