மத்திய அமைச்சருக்கு சாதனையாளர் விருது
சென்னை: சர்க்கரை நோய் ஆராய்ச்சியில், இந்திய அளவில் சிறந்த பங்களிப்பை நல்கியதற்காக, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங்குக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.சென்னை, ராயபுரம் எம்.வி., சர்க்கரை நோய் மருத்துவமனை சார்பில், சர்க்கரை நோய் ஆராய்ச்சி தொடர்பாக, மூன்று நாள் தேசிய மருத்துவ மாநாடு, சென்னையில் துவங்கியது.இந்நிகழ்ச்சியில், இந்தியாவில் சர்க்கரை நோய் ஆராய்ச்சியில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக, மத்திய அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான ஜிதேந்திர சிங்குக்கு, எம்.வி., வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.மருத்துவரான ஜிதேந்திர சிங், சர்க்கரை நோய் சிகிச்சைகளில் நிபுணத்துவம் பெற்றவர். அதே போல், 'மெடிமிக்ஸ்' சோப் தயாரிப்பு நிறுவனமான, ஏ.வி.ஏ., குழுமத்தின் நிர்வாக இயக்குனர் ஏ.வி. அனுாப்புக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் எம்.வி., சர்க்கரை நோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் விஜய் விஸ்வநாதன், தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் விஸ்வநாதன் விஷ்ணு விஜய், சர்க்கரை நோய் சிறப்பு நிபுணர் டாக்டர் பிரசாந்த் அருண், டாக்டர் எஸ்.என். நரசிங்கன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.