உள்ளூர் செய்திகள்

ஆரோக்கியத்துக்கு வித்திடும் உடற்கல்வி படிப்புகள்

சென்னை அருகே உள்ள மேலகோட்டையூரில், மாநில அரசின் பல்கலைக்கழக அந்தஸ்துடன் செயல்படும் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் பல்வேறு இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.முதுநிலை பட்டப்படிப்புகள் - 2 ஆண்டுகள் படிப்பு: எம்.பி.எட்., உடற்கல்வியியல்தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் பி.பி.எட்., படித்திருக்க வேண்டும். குறைந்தது, ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளுக்கு இடையேயான போட்டியில் பங்கேற்றிருக்க வேண்டும்.படிப்பு: எம்.டெக்., விளையாட்டு தொழில்நுட்பம். தகுதி: பி.இ., அல்லது அதற்கு இணையான ஏதேனும் ஒரு பட்டப்படிப்புபடிப்பு: எம்.எஸ்சி. , விளையாட்டு உயிரி இயந்திரவியல் மற்றும் இயக்கவியல். தகுதி: அறிவியல், உடற்கல்வி, பொறியியல், பிசியோதெரபி போன்றவற்றில் ஏதேனும் ஒரு துறையில் இளநிலை பட்டப்படிப்பு.படிப்பு: எம்.பி.ஏ., விளையாட்டு மேலாண்மைதகுதி: ஏதேனும் ஒரு இளநிலைப்பட்டப்படிப்பில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சிபடிப்பு: எம்.எஸ்.சி., விளையாட்டு பயிற்சிதகுதி: இளநிலை பட்டப்படிப்புடன் ஸ்போர்ட்ஸ் கோச்சிங் பிரிவில் டிப்ளமா அல்லது முதுநிலை டிப்ளமா படிப்பு.படிப்பு: எம்.எஸ்.சி., உடற்பயிற்சி உடலியல் மற்றும் ஊட்டச்சத்துதகுதி: ஏதேனும் ஒரு அறிவியல் துறையில் இளநிலை பட்டப்படிப்புபடிப்புகள்: எம்.எஸ்.சி., யோகா, எம்.எஸ்சி., விளையாட்டு உளவியல் மற்றும் சமூகவியல், எம்.எஸ்.சி., விளையாட்டு உளவியல்தகுதி: ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்புவிபரங்களுக்கு: www.tnpesu.org


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்