உள்ளூர் செய்திகள்

மகளிர் கல்லுாரியில் விளையாட்டு விழா

நாமக்கல்: நாமக்கல் - திருச்சி சாலையில், கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரி செயல்படுகிறது. இங்கு, நேற்று முன்தினம், நாற்பெரும் விழா துவங்கி, இரண்டு நாட்கள் நடந்தது. கல்லூரி முதல்வர் மாதவி தலைமை வகித்தார். முதல் நாள் நடந்த பட்டமளிப்பு விழாவில், தர்மபுரி மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் மலர், இளநிலை, முதுநிலை மாணவியருக்கு சான்றிதழ் வழங்கினார்.அதே போல், நேற்று விளையாட்டு விழா, கல்லுாரி ஆண்டு விழா, பேரவை நிறைவு விழா நடந்தது. அதில், விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து, கலை நிகழ்ச்சிகள் நடந்தன. விலங்கியல் துறைத் தலைவர் சர்மிளா பானு, உடற்கல்வி இயக்குனர் கோபிகா, இயற்பியல் துறை இணை பேராசிரியர் ஜோதி, வரலாற்று துறை தலைவர் பத்மாவதி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்