அரசு துவக்கப்பள்ளி ஆண்டு விழா
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே கெரிகேப்பள்ளி கிராமத்திலுள்ள அரசு துவக்கப் பள்ளியில், நாடார் தெரு, புதுக்காடு, கெரிகேப்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். தனியார் பள்ளிக்கு இணையாக, பள்ளியில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.இந்நிலையில், இப்பள்ளியில் நேற்று முன்தினம் மாலை, 'குழந்தைகளை கொண்டாடுவோம்' என்கிற தலைப்பில், ஆண்டு விழா நடந்தது. இதில், மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள், பாரம்பரிய விளையாட்டுகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்குதல் மற்றும், 5ம் வகுப்பு மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா ஆகியவை நடந்தது. தற்போது, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், விழா மேடையில் மாணவ, மாணவியர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.