நேஷனல் பள்ளி ஆண்டு விழா
திண்டிவனம்: திண்டிவனத்தில் நேஷனல் தொடக்கப் பள்ளியின் 124வது ஆண்டு விழா நடந்தது.கன்னிகா பரமேஸ்வரி தேவஸ்தான பூந்தோட்டத்தில் நடந்த விழாவிற்கு, தலைமை ஆசிரியர் ஷீலாதேவி வரவேற்றார். பள்ளியின் செயலாளர் ராம்டெக்ஸ் வெங்கடேசன் வாழ்த்தி பேசினார்.விழாவில், ஆசிரியர் மரியதாஸ், ஒலக்கூர் வட்டார கல்வி அலுவலர் ரவிச்சந்திரன், தலைவர் பி.ஆர்.எஸ்., துணிக்கடை ரங்கமன்னார், பொருளாளர் தினகரன் பேசினர்.விழாவையொட்டி நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியர் கோமதி நன்றி கூறினார்.