உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

விருத்தாசலம்: விருத்தாசலம் ஸ்ரீ விருத்தாம்பிகை கல்வி நிறுவனத்தின் ஆண்டு விழா மற்றும் கே.ஜி., மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.விழாவிற்கு, பள்ளியின் தாளாளர் சுந்தரவடிவேல் தலைமை தாங்கினார். செயலாளர் அனிதா சுந்தரவடிவேல் முன்னிலை வகித்தார்.இந்த விழாவில், கே.ஜி., முடித்த மாணவர்களுக்கு பட்டம் மற்றும் கேடயம் வழங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.இதில், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்