உள்ளூர் செய்திகள்

சிறுவர், சிறுமியருக்கு கோடைகால பயிற்சி

கிருஷ்ணகிரி: ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில், சிறுவர், சிறுமியருக்கு நடந்து வரும் கோடைக்கால பயிற்சியில், 97 பேர் பங்கேற்றுள்ளனர்.சிறுவர்களின் கலை ஆர்வத்தை தூண்டும் வகையில், ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில், சிறுவர், சிறுமியருக்கு பகுதி நேர கலைப்பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் உள்ள ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில், கோடைக்கால கலைப்பயிற்சி முகாம் கடந்த, 6ல் துவங்கி வரும், 15 வரை நடக்கிறது. காலை, 10:00 முதல், 12:00 மணி வரை பயிற்சி அளிக்கப்படுகிறது.இதில், 5 வயது முதல், 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியர், பரத நாட்டியத்தில், 24 பேர், குரலிசையில், 13 பேர், யோகாவில், 20 பேர், ஓவியம் வரைவதில், 40 பேர் என மொத்தம், 97 மாணவ, மாணவியர் பங்கேற்றுள்ளனர். நேற்று நடந்த பயிற்சியில், தலைமை ஆசிரியர் திரிவேணி தலைமையில், ஜவகர் சிறுவர் மன்ற ஒருங்கிணைப்பாளர் மற்றும் திட்ட அலுவலர் ஞானசக்தி பார்வையிட்டார். பயிற்சி நிறைவு நாளில் மாணவர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட உள்ளன. மேலும் விபரங்களுக்கு, ஜவகர் சிறுவர் மன்ற திட்ட அலுவலரை, 99433 51775 அல்லது 0427 - 2386197 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்