விளையாட்டு விடுதி மாணவர்கள் தேர்வு
கோவை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான தேர்வு நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது.விடுதியில் சேர 6, 7, 8, 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் 170 பேர் கலந்து கொண்டனர். உடல் திறன், வேகம், செயல்பாடு, ஒருங்கிணைப்பு ஆற்றல் கண்டறிந்து அவர்கள் விரும்பிய விளையாட்டில் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டனர்.தடகளம், பேஸ்கெட்பால், கபடி, வாலிபால், கிரிக்கெட், ஹாண்ட்பால், ஹாக்கி, புட்பால் போன்ற பிரிவுகளில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாணவிகளுக்கான தேர்வு நாளை நடக்கிறது.