உள்ளூர் செய்திகள்

முதல் இடம் பிடித்த மாணவி

கூடுவாஞ்சேரி: நந்திவரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி அம்பிகா, நேற்று வெளியான பிளஸ் - 2 பொதுத் தேர்வில், 591 மதிப்பெண்கள் பெற்று, செங்கல்பட்டு மாவட்டத்தில், முதல் இடம் பிடித்தார்.இவர், தமிழ், ஆங்கிலம், கணக்குப் பதிவியல், வணிகவியல், பொருளாதாரம், வணிகக் கணிதம் ஆகிய பாடங்களில் முறையே 95, 96, 100, 100, 100, 100, 100 என, மொத்தம் 591 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.இவரின் தந்தையார் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார். தாயார் இல்லத்தரசி. மூத்த சகோதரி பி.டெக்., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.எதிர்காலத்தில் சி.ஏ., எனும் பட்டய கணக்காளர் ஆவது தனது விருப்பம் என, மாணவி அபிராமி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்