ஆதிதிராவிடர் நலத்துறையில் தேர்வு பயிற்சி
சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை துறைச் செயலாளர் சுப்பையன் அறிக்கை:தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை கீழ், 98 மேல்நிலைப் பள்ளிகள், பழங்குடியினர் நலத்துறை கீழ், 36 மேல்நிலைப் பள்ளிகள் செயல்படுகின்றன.இங்கு பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, 'நீட், ஜே.இ.இ., 'க்யூட்' உள்ளிட்ட 19 வகையான உயர்கல்வி நுழைவுத் தேர்வு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. கடந்த 2023 முதல் 2025 வரை, 199 மாணவர்கள் தேர்ச்சி பெற்று, மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து உள்ளனர்.2025 - 2026ம் கல்வியாண்டில், மாணவர்கள் நுழைவுத் தேர்வை எதிர்கொள்ளும் வகையில், அங்கீகரிக்கப்பட்ட மையங்களில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.