சிறப்பு பிரிவினருக்கு மாணவர் சேர்க்கை
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், சிறப்பு பிரிவில் மாணவர் சேர்க்கை நடந்தது.பொள்ளாச்சி, அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரியில், 2026 - 27 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை சிறப்பு பிரிவினருக்கு நடந்தது. இதில், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு இட ஒதுக்கீட்டின்படி, 7 நபர்களுக்கு மாணவர் சேர்க்கை நடந்தது. இதற்கான ஆணையை கல்லூரி முதல்வர் சுமதி வழங்கினார்.நாளை, (9ம் தேதி,) பி.எஸ்.சி., கணிதம், பி.ஏ., ஆங்கிலம், பி.எஸ்.சி., கணினி அறிவியல் போன்ற பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை நடக்கிறது.