உள்ளூர் செய்திகள்

பச்சையப்பன் கல்லுாரிக்கு இருபாலர் அந்தஸ்து

சென்னை: சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு, இருபாலர் கல்லூரி அந்தஸ்து வழங்கி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.பச்சையப்பன் கல்லூரி முதல்வர் பேபி குல்னாஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:நம் நாட்டின் மிகப் பழமையான உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான பச்சையப்பன் கல்லூரிக்கு, தமிழக அரசு இருபாலர் கல்லூரி அந்தஸ்து வழங்கி உத்தரவிட்டுள்ளது. இது, கல்லூரியின் வரலாற்றில், முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ளது.இந்த வரலாற்று சிறப்புமிக்க முடிவு மாணவியருக்கும், இந்நிறுவனத்தின் வாயில்களை திறந்து வைத்து, தரமான உயர்கல்விக்கான வாய்ப்புகளை உருவாக்குவதோடு, பன்முகத்தன்மையும், உயிர்ப்பும் நிறைந்த கல்விச்சூழலை உருவாக்கும்.கல்லூரியின் கனவுகளையும், எதிர்பார்ப்புகளையும் அங்கீகரித்து, நீண்டகால கோரிக்கைக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசு மற்றும் உயர்கல்வி துறைக்கு நன்றி.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்