போட்டி தேர்வுக்கு சிவகங்கையில் பயிற்சி
சிவகங்கை: மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு சிவகங்கை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஜூன் 22 முதல் துவங்கும் என கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா தெரிவித்தார்.அவர் கூறியதாவது: அரசு சார்பில் அறிவிக்கும் போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்தப்படுகிறது. தற்போது மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (கம்பைன்ட் கிராஜூவேட் லெவல்) போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஜூன் 22 முதல் நடைபெறும். இந்த பயிற்சி வகுப்பில் வாரந்தோறும் மாதிரி பயிற்சி தேர்வு, மாநில அளவிலான மாதிரி தேர்வும் நடத்தப்படும். பயிற்சி தொடர்பாக நேரிலோ அல்லது அலுவலக தொலை பேசி எண் 04575 - 240 435ல் கேட்டு தெரிந்து கொள்ளலாம். studycirclestudentsvg@gmail.com என்ற இணைய தளம் மூலமும் தெரிந்து பயிற்சி பெறலாம். மேலும் இங்குள்ள போட்டி தேர்வு பயிற்சி புத்தகத்தை பயன்படுத்தி கொள்ளலாம் என்றார்.