உள்ளூர் செய்திகள்

ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு தொடக்கம்

சேலம்: நடப்பு கல்வி ஆண்டில், அரசு பள்ளிகளில் இடமாறுதல் பெற விரும்பும் ஆசிரியர்களிடம் இருந்து, கடந்த, 15 முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவர்களுக்கு, மாநில அளவில் முன்னுரிமையில் வழங்கும் இடமாறுதல் கலந்தாய்வு ஆன்லைன் முறையில் நேற்று தொடங்கியது.அதன்படி சேலம் மாவட்டத்தில், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்தாய்வு, சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை வகித்தார். 53 தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர். 19 காலி இடங்கள் காட்டப்பட்டன.அதே போல் தாரமங்கலம் செங்குந்தர் பள்ளி, சேலம் சிறுமலர் துவக்கப் பள்ளிகளில், தொடக்க கல்வித்துறை ஆசிரியர்களுக்கு, மலை சுழற்சி மாறுதல் கலந்தாய்வு நடந்தது. 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். வரும், 16 வரை நடக்கும் கலந்தாய்வில், மாவட்டத்திற்குள், மாவட்டம் விட்டு மாவட்டம், உபரி ஆசிரியர் பணி நிரவல் உள்ளிட்ட இடமாறுதல்கள் வழங்கப்பட உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !