இந்துஸ்தான் கல்வியியல் கல்லுாரியில் பட்டமளிப்பு
நவஇந்தியா: இந்துஸ்தான் கல்வியியல் கல்லுாரி 15வது பட்டமளிப்பு விழாவில், இளங்கலை கல்வியியல் படிப்பை நிறைவு செய்த மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. பாரதியார் பல்கலை பதிவாளர் ராஜவேல் மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் செயலர் சரஸ்வதி பேசுகையில், “ஆசிரியர் பணி என்பது வெறும் தொழில் மட்டுமல்ல. அது ஒரு அறப்பணி மற்றும் சமூகப் பொறுப்பு. தங்களை முழுமையாக கல்விப் பணிக்கு அர்ப்பணித்து, மாணவர்களின் அறிவு, திறமை மற்றும் நற்பண்புகளை வளர்க்க ஆசிரியர்கள் பாடுபட வேண்டும்,” என்றார்.இந்துஸ்தான் நிறுவனங்களின் இணைச்செயலாளர் பிரியா, இந்துஸ்தான் கல்வியியல் கல்லுாரின் முதல்வர் குட்டியம்மாள் மற்றும் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.