ஆசிரியர்கள் தகுதி உயர வேண்டாமா?
சென்னை: புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அறிக்கை:கடந்த 2010க்கு முன்பு ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு, 'டெட்' தேர்விலிருந்து விலக்கு கேட்டு மத்திய அரசு மற்றும் உச்ச நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறிக் கொண்டிருப்பதற்கு பதிலாக, தீவிரப் பயிற்சி அளித்து, 'டெட்' தேர்வில் வெற்றி பெற வைத்தால், ஆசிரியர்களின் தரம் உயரும். அரசுப் பள்ளிகளில் கல்வியின் தரமும் மிளிரும்.பல தேர்வுகளுக்கு விலக்கு கேட்டு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தனித்தீர்மானங்கள் பலனளிக்கவில்லை; இனியும் பலனளிக்குமா என்பதும் கேள்விக்குறி தான்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.