பள்ளி ஆசிரியர்களுடன் போலீசார் ஆலோசனை
எரியோடு: எரியோட்டில் போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பாக அரசு, தனியார் பள்ளி ஆசிரியர்களுடன் போலீசார் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.டி.எஸ்.பி., சுரேஷ்பாண்டியன் தலைமை வகித்தார். இன்ஸ்பெக்டர்கள் எரியோடு வினோதா, குஜிலியம்பாறை ராஜா, எஸ்.ஐ.க்கள் ஜெய்கணேஷ், பாலசுப்பிரமணி பங்கேற்றனர். மாணவர்களிடம் போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, பயன்பாட்டை தடுப்பது, போதைப்பொருட்கள் விற்பனை செய்தால் போலீசாருக்கு தகவல் தரும் வழிமுறை குறித்து விளக்கப்பட்டது. தகவல் தருபவர்கள் குறித்து ரகசியம் காக்கப்படும் என்பதால் அச்சமடைய தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.