உள்ளூர் செய்திகள்

ஆசிரியர்களை கவுரவித்த முன்னாள் மாணவர்கள்

கோவை: அசோகபுரம் அரசு பள்ளியின் 1989 - 90ல் எஸ்.எஸ்.எல்.சி., 1990 - 92ல் பிளஸ் 2 படித்த மாணவர்கள் தங்களுக்கு கல்வி அளித்த ஆசிரியர்களை கவுரவிக்க திட்டமிட்டனர்.ஆக., 30ல் நடந்த இதற்கான நிகழ்ச்சியில், தங்கள் ஆசிரியர்களை மேடையில் அமர வைத்து, பேச வைத்தனர். பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர்.70 வயதை கடந்த ஆசிரியர்கள் பலரும் தங்களது நினைவுகளை பகிர்ந்தனர். முன்னாள் மாணவர்கள் தாங்கள் படித்த வகுப்பில் அமர்ந்து, அதே ஆசிரியர்களை வகுப்பு எடுக்க செய்து மகிழ்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்