உள்ளூர் செய்திகள்

விஜயதசமியை முன்னிட்டு அரசுப்பள்ளிகளில் அட்மிஷன்

கோவை: விஜயதசமியை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் எல்.கே.ஜி., யு.கே.ஜி., முதலாம் வகுப்புகளுக்கான சிறப்பு மாணவர் சேர்க்கை முகாம் நடத்தப்படுகிறது. இதையடுத்து, தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து சேர்க்கை பணிகளை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.மழலையர் வகுப்புகளில் குழந்தைகளை சேர்க்காமல் விட்ட பெற்றோர்களும், வேலைவாய்ப்புக்காக பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு இடம்பெயர்ந்த குடும்பங்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.விஜயதசமி நாளில் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது சிறப்பு என்ற நம்பிக்கையுடன், அந்நாளில் சேர்க்கை நடத்த விரும்பும் பெற்றோர்களுக்கும், இந்த முகாம் பயனுள்ளதாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.தற்போது பள்ளி செல்லா, இடைநின்ற மாணவர்களின் கணக்கெடுப்பு நடந்து வரும் நிலையில், கண்டறியப்படும் வெளிமாநில தொழிலாளர்களின் குழந்தைகளையும் பள்ளிகளில் சேர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.சேர்க்கை பெறும் மாணவர்களுக்கு வருகைப்பதிவு உண்டு. பாடங்களை தொடர்ந்து கற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும். இதனால், சேர்க்கையை தவறவிட்ட குழந்தைகள் அடுத்த கல்வியாண்டு வரை காத்திருக்காமல், நடப்பு கல்வியாண்டின் எஞ்சிய நாட்களில் பள்ளியில் தொடர்ந்து படிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்