பல்கலை நிறுவனர் பிறந்தநாள் விழா
சிதம்பரம்: அண்ணாமலை பல்கலை நிறுவனர் அண்ணாமலை செட்டியார் 146வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.அதனையொட்டி, பல்கலை வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.விழாவில் புல முதல்வர்கள், துறைத்தலைவர்கள், இயக்குநர்கள், இணை, துணை இயக்குநர்கள் மற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.