சங்கரா வித்யாலயா ஆண்டு விழா
ஸ்ரீ சங்கரா குளோபல் அகாடமி பள்ளியின் ஆண்டு விழா, சமீபத்தில் கிரசன்ட் கல்லுாரி வளாகத்தில் நடந்தது.இதில், சிறப்பு விருந்தினராக பி.ஜி., எக்யூப்மென்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எஸ்.எம்.பாலாஜி பங்கேற்று, கடந்த கல்வியாண்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவர் வருண் சிவசக்திக்கு பரிசு வழங்கி கவுரவித்தார்.