உள்ளூர் செய்திகள்

சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் கண்காட்சி

கடலுார்: கடலுார் துறைமுகம் சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 'சைன்டிரானிக் - 26' என்ற தலைப்பில் அறிவியல், கலை மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிரிவுகளை சார்ந்த கண்காட்சி நடந்தது. பள்ளி தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் உதயகுமார்சாம் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கால்நடை மருத்துவமனை மண்டல இணை இயக்குநர் முருகவேல் கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார்.பள்ளி தாளாளர் கஸ்துாரி சொக்கலிங்கம், நிறுவனர் சொக்கலிங்கம், நிர்வாக செயல் அலுவலர் லஷ்மி சிவக்குமார், மேலாண் இயக்குநர் கதிர்வேல், மக்கள் தொடர்பு அலுவலர் சிவராஜ் மற்றும் பெற்றோர், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.விண்வெளி நிகழ்வுகள், ஏரோ நாட்டிக்ஸ் மாதிரி, பொருட்கள், சைபர் கிரைம் விழிப்புணர்வு ஆகிய தலைப்புகளில் மாணவர்கள் படைப்புகளை காட்சிப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்