உள்ளூர் செய்திகள்

இசைப்பள்ளியில் பணி: விண்ணப்பிக்க அழைப்பு

ஈரோடு: ஈரோடு மாவட்ட அரசு இசைப்பள்ளி மையத்தில், பகுதி நேர நாட்டுப்புற கலை பயிற்சி வகுப்புகளான சிலம்பாட்டம், கும்மி, கோலாட்டம் (வள்ளி), தப்பாட்டம், நாட்டுப்புற நடனம் பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில், 7,000 ரூபாய் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் நிரப்ப உள்ளனர்.விருப்பமுள்ள, மாவட்டத்தை சேர்ந்த, 50 வயது நிறைவு பெற்ற, 25 ஆண்டு கலை பயிற்சி பிரிவில் அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். வெள்ளி, சனிக்கிழமை மாலை, 4:00 முதல், 6:00 மணி வரை பயிற்சி வழங்க வேண்டும். நேர்காணலுக்கு சுய விபரக்குறிப்புடன், பணி அனுபவ சான்றிதழ், அசல் சான்றுகளுடன் வரவேண்டும். விண்ணப்பத்தை, 30ம் தேதி மாலைக்குள் நேரில் அல்லது தபாலில், 'தலைமை ஆசிரியர், மாவட்ட அரசு இசைப்பள்ளி, பி.பெ.அக்ரஹாரம், பவானி சாலை, ஈரோடு - 638005, போன்: 73733 37966, 0424 2294365' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்