உள்ளூர் செய்திகள்

மாணவருக்கு கற்றல் அடைவுத்திறன் தேர்வு

பொங்கல் பண்டிகைக்கு முன்பாக, 2027 ஜனவரியில் மாநில கற்றல் அடைவுத்திறன் (ஸ்லாஷ்) தேர்வு நடத்த கல்வித்துறை ஆயத்தமாகி வருகிறது.அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 3, 5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு இத்தேர்வு நடத்தப்படுகிறது. மனப்பாடம் செய்வதை விட, பாடங்களைப் புரிந்து கற்றுள்ளனரா என்பதை மதிப்பிடுவதே தேர்வின் நோக்கம். இதற்காக, கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் வழங்கும் வினாக்களைக் கொண்டு மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க பள்ளிகளுக்கு தொடக்கக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. 2025 - 26ம் கல்வியாண்டில் பல்வேறு காரணங்களால் இத்தேர்வு நடைபெறாத நிலையில், ஓராண்டு இடைவெளிக்குப் பின் நடைபெற உள்ள தேர்வு, பள்ளிகளின் கற்றல் தரத்தை மதிப்பிட உதவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்