உள்ளூர் செய்திகள்

ரயில்வேயில் காலியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

சென்னை: 'ரயில்வேயில் நாடு முழுதும் காலியாக உள்ள, இரண்டு லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்' என, எஸ்.ஆர்.இ.எஸ்., எனப்படும், தெற்கு ரயில்வே தொழிலாளர்கள் சங்கம், கோரிக்கை விடுத்துள்ளது.இந்த அமைப்பின் பொது மகாசபை கூட்டம், சென்னை ஐ.சி.எப்., வளாகத்தில் நடந்தது. சங்கத்தின் தேசிய தலைவர் ராகவையா, பொதுசெயலர் கோபாலகிருஷ்ணன் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில், 'நாடு முழுதும் காலியாக உள்ள இரண்டு லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும்' என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தெற்கு ரயில்வே பொதுமேலாளர் சுப்பாராவ் பேசுகையில், 'ரயில்வே ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட சலுகைகளை பெற்று தருவதில், இந்த சங்கம் சிறப்பாக செயல்பட்டுள்ளது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்