உள்ளூர் செய்திகள்

மே மாதம் ஒத்திவைக்கப்பட்டது ஏ.ஐ.இ.இ.இ.

அனைத்திந்திய பொறியியல் நுழைவுத்தேர்வு(ஏ.ஐ.இ.இ.இ.) மே மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சி.பி.எஸ்.இ. நடத்தும் ஏ.ஐ.இ.இ.இ. தாள்வழித் தேர்வு 2011, ஏப்ரல் 24 -இல் நடத்தப்படுவதாக இருந்தது. ஆனால் தற்போது ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி, அத்தேர்வானது மே மாதம் 1 ஆம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் தகவல் புல்லட்டின் விற்பனை தொடக்கமும் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட தேதியான டிசம்பர் 15க்கு பதிலாக டிசம்பர் 22ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அதேசமயத்தில், சோதனை முறையில், ஆன்லைனில், 1 லட்சம் பேருக்கும் நடத்தும் ஏ.ஐ.இ.இ.இ., எந்த மாற்றமுமின்றி ஏற்கனவே திட்டமிட்டபடி மே 1 முதல் 15 வரையிலான தேதிகளில் இந்தியாவின் 20 நகரங்களில் நடைபெறும் என்று சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்