தொழில்முனைவு மேலாண்மையில் முதுநிலை சான்றிதழ்
எக்ஸ்.எல்.ஆர்.ஐ. வணிகம் மற்றும் மனிதவள பள்ளி, தொழில்முனைவு மேலாண்மையில்(பி.ஜி.பி - சி.இ.எம்), 2011-12 கல்வியாண்டு முதுநிலை சான்றிதழ் படிப்பிற்கான மாணவர் சேர்க்கையை தொடங்கியுள்ளது. இப்படிப்பிற்கு விண்ணப்பிக்க, ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் கணினி அறிவு உள்ளவராகவும், தொழில்முனைதலில் ஆர்வம் உள்ளவராகவும் இருக்க வேண்டும். இப்படிப்பிற்கு விண்ணப்பிக்க வயது வரம்பு எதுவும் கிடையாது. விண்ணப்பங்களை ஆன்லைனிலும், விண்ணப்பத்தில் ஒரு புகைப்படம் ஒட்டி சாதாரண முறையிலும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களின் விற்பனை மற்றும் சமர்பித்தலுக்கான கடைசி தேதி 2011, ஜனவரி 17.