உள்ளூர் செய்திகள்

கேட் தேர்வில் மகாராஷ்டிரா ஆதிக்கம்

நாட்டில் உள்ள 11 ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனங்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் மேலாண்மை கல்வி நிறுவனங்களில், எம்.பி.ஏ., படிப்புக்கான அட்மிஷன் "கேட்' நுழைவுத்தேர்வு அடிப்படையில் நடைபெறுகிறது. கடந்த அக். 27 முதல் நவ. 24 வரை "கேட்' நுழைவுத்தேர்வு நடந்தது. மொத்தம் 1,86,238 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதன் முடிவுகள் ஜன. 12ல் வெளியானது. இன்ஜினியர்களே அதிகம் தேர்வு எழுதியவர்களில் 8 பேர் நூறு சதவீத மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றனர். இவர்கள் அனைவரும் இன்ஜினியரிங் பிரிவு மாணவர்கள் ஆவர். அடுத்ததாக 19 பேர் 99.9 சதவீத மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்தை பெற்றனர். இதில் கேரளா மற்றும் ஆந்திராவை சேர்ந்த தலா இரு மாணவிகளும் அடங்குவர். இவர்களும் இன்ஜினியரிங் மாணவர்கள் தான். இந்தாண்டும் கேட் தேர்வில் முதலிடத்தை இன்ஜினியரிங் மாணவர்களே அதிகம் பேர் பெற்றுள்ளனர். மகாராஷ்டிரா முதலிடம்முதலிடம் பெற்ற எட்டு பேரில் மூன்று பேர் மகாராஷ்டிரா (மும்பையில் 2, புனேயில் ஒருவர்)  மாநிலத்தை சேர்ந்தவர்கள். மற்ற ஐந்து பேர் பெங்களூரு, சென்னை, கோல்கட்டா, இந்தூர், டில்லி ஆகிய நகரங்களிலிருந்து தலா ஒருவர் முதலிடத்தை பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்