உள்ளூர் செய்திகள்

ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுக்கும் மாணவர்கள்

கடந்த வருட கேம்பஸ் வேலை வழங்களில்(கேம்பஸ் பிளேஸ்மென்ட்) ஏராளமான மாணவர்கள், நிறுவனங்களுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்து விட்டனர். குறிப்பிட்ட காலத்திற்கு முன்பாகவே நிறுவனத்தை விட்டு செல்ல நேர்ந்தால், ஒரு குறிப்பிட்ட தொகையை நிறுவனத்திற்கு வழங்க வேண்டும் என்பது இதில் முக்கியமானது. பொதுவாக கம்பெனிகள், புதிய பணியாளர்களுக்கு பயிற்சியளிப்பதற்காக அதிக தொகையை செலவழிக்கின்றன. இதன் காரணமாகவே, வணிக நிறுவனங்கள் மேற்கண்ட நிபந்தனைகளை முன்வைக்கின்றன என்பது ஒரு வாதம். தகவல்களின்படி, ஐ.ஐ.டி-மும்பை -இல், 90% நிறுவனங்கள், மாணவர்களை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு நிர்பந்திக்கவில்லை. ஐ.ஐ.டி-சென்னை -இல் 70% நிறுவனங்கள், மாணவர்களிடமிருந்து வெறும் தலையசைப்பையே, வாக்குறுதிக்கான அடையாளமாக பெற்றன. இந்நிலை குறித்து கூறிய ஐ.ஐ.டி. வட்டாரங்கள், "எதிர்கால பணி நிலையில் தங்களுக்கு எது பொருத்தமானது என்பதையே புரிந்துகொள்ளாத நிலையில், ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது மாணவாகளுக்கு உகந்ததாக இருக்காது. மேலும் வேலைவாய்ப்பு சந்தையில் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் மாணவர்களிடையே அதிகரித்திருப்பதும் இந்த மறுத்தலுக்கான காரணங்களில் ஒன்று" என்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்