யூ.பி.எஸ்.சி.,யின் இன்ஜினியரிங் சர்வீசஸ் தேர்வு
மத்திய அரசுப் பணிகளுக்காக பணியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் மத்திய அரசுப் பணிகளுக்காக ஆண்டு தோறும் இன்ஜினியரிங் சர்வீஸ் தேர்வை நடத்தி வருகிறது. இந்த ஆண்டிற்கான இன்ஜினியரிங் சர்வீஸ் தேர்விற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்த தேர்வு பற்றிய முழு விபரங்களறிய இணைய தளத்தைப் பார்க்கவும். கல்வித் தகுதி2011 ஆம் ஆண்டு யூ.பி.எஸ்.சி., இன்ஜினியரிங் சர்வீஸ் தேர்வை எழுத விரும்புபவர்கள் இன்ஜினியரிங் பிரிவில் பட்டப்படிப்போ அல்லது வயர்லெஸ் கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ், ரேடியோ பிஸிக்ஸ் அல்லது ரேடியோ இன்ஜினியரிங் ஆகிய பாடங்களை உள்ளடக்கிய எம்.எஸ்சி., பட்டப்படிப்பையோ முடித்திருக்க வேண்டும். வயது வரம்புஇன்ஜினியரிங் சர்வீஸ் தேர்வை எழுத விரும்புபவர்கள் 01.08.2011 அன்று 21 பூர்த்தியானவர்களாகவும் 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறைஇன்ஜினியரிங் சர்வீஸ் தேர்விற்கு ஆன்லைன் மற்றும் ஆப்லைன் என்ற இரண்டு முறைகளிலும் விண்ணப்பிக்கலாம். ஆப்லைனில் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தேர்வு செய்த தபால் நிலையங்களில் இருந்து ரூ.20/ கட்டணம் செலுத்தி பொது விண்ணப்பப் படிவத்தைப் பெறலாம். முழுமையாகப் பூர்த்தி செய்த விண்ணப்பங்களைப் பின்வரும் முகவரிக்கு தபால் மூலம் மட்டுமே 14.02.2011க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். தேர்வுக் கட்டணம்யூ.பி.எஸ்.சி.,யின் இன்ஜினியரிங் தேர்வை ஆப்லைனில் எழுத விரும்புபவர்கள் ரூ.100/க்கான சென்ட்ரல் ரெக்ரூட்மென்ட் ஸ்டாம்ப் மூலம்மட்டுமே தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த முடியும். ஆன்லைனில் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ரூ.50/ஐ ஸ்டேட் வங்கியின் நெட் பேங்கிங் வசதி மூலமாகவோ அல்லது கிரெடிட்/டெபிட் கார்டு மூலமாகவோ அல்லது ஸ்டேட் வங்கியில் ரூ.50/ஐ ரொக்கமாகவோ கட்டணத்தைச் செலுத்த முடியும். இதன் பின்னரே ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பெண் விண்ணப்பதாரர்கள், எஸ்.சி., எஸ்.டி., உடல் ஊனமுற்றோர் ஆகியோருக்கு கட்டணம் எதுவும் கிடையாது. முகவரிController of Examinations,Union Public Service Commision,Dholpur House,Shajahan Road,New Delhi 110069 விண்ணப்பங்கள் சென்றடைய இறுதி நாள்: 14.02.2011 இணைய தள முகவரி: www.upsc.gov.in