உள்ளூர் செய்திகள்

உயர்கல்வி நிறுவனங்களில் அனைவருக்கும் வாய்ப்பு

குடியரசு தினத்தை ஒட்டி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீல், "சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கும் வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும். இதன்மூலம்தான் சமூகத்தில் ஒரு சமத்துவ நிலை ஏற்படும். எனவே இந்த லட்சியத்தை நோக்கிய வகையில் நமது முயற்சிகள் இருக்க வேண்டும். இந்தியாவின் தொலைதூர பகுதிகளின் மக்கள், பழங்குடியின மக்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். இதைத்தவிர தொடக்க கல்விக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்" என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்