உள்ளூர் செய்திகள்

ஜி.ஆர்.இ. தேர்வுமுறை மாற்றம் சாதகம்?

வெளிநாட்டில் உயர்கல்வி படிப்பதற்கு மாணவர்கள் எழுதும் கிராஜுவேட் ரெக்கார்ட் எக்ஸாம்(ஜி.ஆர்.இ) -இல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2011, ஆகஸ்ட் முதல் அது நடைமுறைக்கு வருகிறது. ஜி.ஆர்.இ. தேர்வு 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வெர்பல் ரீசனிங், குவாண்டிடேடிவ் ரீசனிங் மற்றும் அனலிடிகல் ரைட்டிங் போன்றவைதான் அந்த பகுதிகள். ஆனால் இந்த பழைய முறையை போலல்லாமல், ஜி.ஆர்.இ. ஜெனரல் தேர்வில் செய்யப்பட்டுள்ள மாற்றத்தின்படி, தேர்வெழுதும் ஒருவர் எந்த பிரிவில் உள்ள கேள்விகளுக்கு பதிலளித்திருந்தாலும், எழுதிய பதிலை திருத்துவதற்கான வசதிகள் தரப்பட்டுள்ளன. பொதுவாக தற்போதைய தேர்வு முறையில் ஜி.ஆர்.இ. தேர்வை எழுதும் மாணவர்கள் வொகாபுலரி சம்பந்தமாக அதிகம் மனப்பாடம் செய்ய வேண்டியிருக்கும். ஆனால் தற்போது அந்த முறைக்கு பதிலாக, ரீசனிங் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் திருத்தியமைக்கப்பட்ட முறையின் மூலம், மாணவர்கள் ஆன்லைன் கால்குலேட்டரை பயன்படுத்தவும் முடியும். இந்த புதிய முறையிலான தேர்வின் மொத்த நேரம் 3.5 மணி நேரங்கள். தற்போதிருக்கும் பழைய முறையானது ஜூன் மாதம் 30 ம் தேதி வரை நடைமுறையிலிருக்கும். ஆனால் ஆகஸ்ட் மாதம் முதல் புதிய முறையானது அமலுக்கு வந்துவிடும். அதேசமயம் ஆகஸ்ட் மாதம் புதிய முறை தேர்வை எழுதுபவர்கள் தங்களின் முடிவுகளைப் பெற 1 மாதத்திற்கும் மேலாகிவிடும். ஆனால் தற்போதைய தேர்வு முறையில், முடிவுகள் உடனடியாக கிடைத்துவிடும். எனவே ஜூன் 30 ம் தேதிக்குள் ஜி.ஆர்.இ. தேர்வுகளை முடித்துவிட பல மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ஏனெனில் அது மாணவர்களுக்கு பழக்கமான முறையாகவும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்