கர்நாடகா பாங்கில் கிளார்க் பணியிடங்கள்
கர்நாடகா மாநிலம் மங்களூருவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் தனியார் துறை வங்கியான கர்நாடகா வங்கியில் கிளரிகல் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வங்கி வாடிக்கையாளர் சேவைக்கு மிகவும் பெயர் பெற்ற வங்கியாகும். வயது வரம்பு: கர்நாடகா வங்கியில் கிளரிகல் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க 01.02.2011 அன்று அதிகபட்சம் 28 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் 31.01.1983 அன்று அல்லது இதற்குப் பின் பிறந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். கம்ப்யூட்டர் திறனும், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பேசும் திறமைகளும் கூடுதலாகத் தேவை. தேர்ச்சி முறை: கர்நாடகா வங்கியின் கிளரிகல் காலியிடங்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற அடிப்படையில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எழுத்துத் தேர்வை தமிழ் நாட்டிற்கு அருகிலுள்ள மாநில மையமான பெங்களூரு, புது டில்லி, மும்பை போன்ற ஏதாவது ஒரு மையத்தில் எழுத வேண்டும். விண்ணப்பக் கட்டணம்: கர்நாடகா வங்கியின் கிளரிகல் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.200/க்கான டி.டி.,யை "Karnataka Bank Limited" என்ற பெயரில் மங்களூருவில் மாற்றத்தக்கதாக எடுக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: கர்நாடகா வங்கியின் கிளரிகல் பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்ட படிவ மாதிரியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். முழுமையாகப் பூர்த்தி செய்த விண்ணப்பங்களைப் பின்வரும் முகவரிக்கு 19.02.2011க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்கும் கவரின் மீது தவறாமல் "Application for the Clerical Post" என்று குறிப்பிட வேண்டும். முகவரி: The Deputy General Manager (HR & IR),Karnataka Bank Limited,Head Office, Mahaveera Circle,Kankanady, Mangalore - 575002Karnataka. இணைய தள முகவரி: "www.karnatakabank.com"