பள்ளிகளில் அண்ணா-அக்கா உறவுமுறை
பெண் ஆசிரியர்களை மேடம் அல்லது டீச்சர் என்றும், ஆண் ஆசிரியர்களை சார் என்றும் அழைப்பதிலிருந்து தவிர்த்து, அவர்களை அக்கா-அண்ணா என்று மாணவ-மாணவிகள் அழைக்கின்றனர். அதேமுறையில் மாணவ-மாணவிகளும் தங்களுக்குள் பெயர்சொல்லி அழைத்துக் கொள்ளாமல், வயது வித்தியாசமின்றி அண்ணா-அக்கா என்று அழைத்துக் கொள்கிறார்கள். மேலும் ஆசிரியர்கள்-பள்ளி முதல்வர்-ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் ஆகியோரும் தங்களுக்குள் அண்ணா-அக்கா உறவு முறையையே பின்பற்றுகின்றனர். இந்த தமிழக கலாச்சாரமானது, கோவையிலுள்ள என்.ஜி.ஆர். சீனியர் செகண்டரி பள்ளி, தவத்திரு சாந்தலிங்க அடிகளார் மேல்நிலைப் பள்ளி மற்றும் ராமகிருஷ்ணா குரூப் கல்வி நிறுவனங்களில் பின்பற்றப்படுகிறது. இந்த கலாச்சார வழக்கத்தின் மூலமாக ஆசிரியர்-மாணவர் உறவு வலுப்படுவதுடன், மாணவ-மாணவிகளுக்கு இடையே ஏற்படும் பருவரீதியான இனக்கவர்ச்சி பிரச்சினைகள், தவறான பழக்க வழக்கங்கள் போன்றவை தவிர்க்கப்படும் என்று சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.