உள்ளூர் செய்திகள்

சென்னையில் அமெரிக்க கல்வி கண்காட்சி

இந்தியாவின் பெரிய கல்வி கண்காட்சிகளில் ஒன்றாக கருதப்படும் அமெரிக்க கல்வி எக்ஸ்போ கண்காட்சி, இந்தாண்டு சென்னையில் நடைபெற உள்ளது. சென்னை பார்க் ஷெரட்டன் ஹோட்டலில் இம்மாதம் 24 ஆம் தேதி மாலை 5 முதல் 7 மணிவரை நடக்கும் இக்கண்காட்சியை, சர்வதேச மாணவர் நெட்வொர்க் நடத்துகிறது. மேலும் அமெரிக்க வர்த்தகத் துறை மற்றும் அமெரிக்க துணை தூதரகம் போன்றவை இந்த முயற்சிக்கு ஆதரவளிக்கும் அமைப்புகள். இதற்கான நுழைவுக்கட்டணம் எதுவுமில்லை. அமெரிக்காவில் படிக்கவரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பொருட்டு நடத்தப்படும் இந்த கண்காட்சியில், மாணவர் விசா செமினார் மற்றும் உதவித்தொகை கண்காட்சியும் நடைபெற உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்