உள்ளூர் செய்திகள்

சி.பி.எஸ்.இ. பொதுத் தேர்வு துவங்கியது

சி.பி.எஸ்.இ. பொதுத் தேர்வுகள் இன்று (01.03.2011) துவங்கின. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஆர்வத்தோடு தேர்வு எழுதினர். இந்தியா மட்டும் அல்லாமல் வெளிநாடுகளிலும் சி.பி.எஸ்.இ. பயிலும் மாணவர்கள் இந்த தேர்வினை எழுதி உள்ளனர். தொடர்ந்து பள்ளித் தேர்வுகளும், சிறப்பு வகுப்புகளும் என்று ஓடிக்கொண்டு இருந்த மாணவர்கள் ஆர்வத்தோடு காத்திருந்த இறுதி தேர்வுகள் துவங்கிவிட்டன. 12 ஆம் வகுப்பு தேர்வினை 7 லட்சத்து 69 ஆயிரத்து 929 மாணவர்கள் எழுதினர். 10௦ வகுப்பு தேர்வினை 10 லட்சத்து 61 ஆயிரத்து 566 மாணவர்கள் எழுதினர். இன்று 12 ஆம் வகுப்பு மாணவர்கள் இயற்பியல் படத் தேர்வினையும், 10௦ ஆம் வகுப்பு மாணவர்கள் மொழிப் பாடத் தேர்வினையும் எழுதினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்