உள்ளூர் செய்திகள்

மாணவிகளுக்கு இலவச ரயில் பாஸ்

பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு இலவச ரயில் பாஸ் வழங்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். உலக மகளிர் தினத்தின் பரிசாக இந்த இலவச ரயில் பாஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே பட்ஜெட்டின் மீது மாநிலங்களவையில் நடந்த விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய மம்தா பானர்ஜி, உலக மகளிர் தினத்தையொட்டி பெண்களுக்கு சிறப்பு சலுகை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு உள்ளூர் ரயில்களில் மாதாந்திர சீசன் டிக்கெட் இலவசமாக வழங்கப்படும். இதன் மூலம், பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் பெண்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். பெண்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்க தனி மையங்களை ரயில்வே துவங்கும் என்றும் அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்